இந்தியா

அதிர்ச்சி.. ஏடிஎம் மூலம் பரவும் கொரோனா வைரஸ்!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ்க்கு எதிரான. இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பூச்சியியல் முதுநிலை வல்லுநர் மணி வர்மா, “கொரோனா வரிரஸ் விலங்குகளிடமிருந்து பரவுவதில்லை. மனிதர்களிடமிருந்து தான் பரவுகிறது.

ஏடிஎம்-ல் உள்ள தொடுதிரை, பொத்தான்களை அழுத்தும் போதும் வைரஸ் கிருமி பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதை தவிர்த்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்து முன்னெச்சரிக்கையோடு இருங்கள்” என்று மணி வர்மா கூறியுள்ளார்.

சீனாவில், ஒரு நாளைக்கு 1000 ரூபாய் ரொக்கப் பணம் கையிலிருந்தால் போதும். பிற பரிவர்த்தனைகளை எல்லாம் ஆன்லைன் மூலமாகவும், டிஜிட்டல் வழியாகவும் செய்துகொள்ள முடியும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்தியாவில் இப்போது தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், கோரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்த பிறகு சீனாவில் பழைய ரூபாய் நோட்டுகள் அழிக்கப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வரும் போது ஐல் உள்ள கொரோனா வைரஸ் கிருமிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

அதே போன்று இந்திய வங்கிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வெண்டும்.

seithichurul

Trending

Exit mobile version