இந்தியா

ரூ.103-க்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பு மாத்திரை.. உங்கள் கேள்விக்கான பதில்கள்!

Published

on

கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தொடக்க காலத்தில் அதற்கு எதிராக போராடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

ஒரு ஃபாவிபிராவிர் மாத்திரை 103 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 200 மில்லி கிராம் கொண்ட ஒரு ஃபாவிபிராவிர் மாத்திரை அட்டை 3,500 ரூபாய். 34 மாத்திரைகள் இருக்கும்.

மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை

கொரோனா வைரைஸ் தாக்கம் குறைவாக உள்ள போது முதல் நாள் 1800 மில்லி கிராம் ஃபாவிபிராவிர் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தினம் 800 மில்லி கிராம் என்று 14 நாட்களுக்கு இரண்டு முறை மத்திரையைச் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

எங்கு கிடைக்கும்?

ஃபாவிபிராவிர் மாத்திரை மருத்துவமனை மட்டுமல்லாமல் மருந்துக்கடைகளில் சில்லறையாகவும் கிடைக்கும். ஆனால் மருத்துவரின் பரிந்துரை சிட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது.

ஃபாவிபிராவிர் உண்மையாகவே கொரோனாவை குணப்படுத்துமா?

“ஃபாவிபிராவிர் உண்மையிலேயே சாத்தியமான ஒரு மாற்றத்தைத் தான் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற அளவிலான உறுதியான தரவு ஏதுமில்லை. ஆனால் தற்போது நம்மிடம் உள்ள தரவுகளை அதை உறுதி செய்கின்றன. அடுத்த இரண்டு மாதத்தில் இந்த மருந்து உண்மையாகவே கொரோனாவை குணப்படுத்துமா என்பதற்கான தரவுகள் கிடைத்துவிடும். இப்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனை அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக இந்த மருந்து வேலை செய்யும் என்று தெரிகிறது என்று கிளென்மார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது” என்று மேக்ஸ் ஹெல்த் கேர் இணை இயக்குநர் மருத்துவர் ரோமெல் டிக்கோ கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளும் இதை பயன்படுத்தலாமா?

ஃபாவிபிராவிர் மாத்திரையை நீரிழிவு நோய், இதய நோயாளிகளும் கொரொணாவின் தாக்கம் அவர்களது உடம்பில் குறைவான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் போது பயன்படுத்தலாம். 88 சதவீதம் வரை ஃபாவிபிராவிர் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது என்று தரவுகள் கூறுகின்றன. 20 முதல் 90 வயதுடைய நோயாளிகளுக்கு இது சோதனை செய்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கிளென்மார்க் நிறுவனம் மட்டும் தான் முதல் முறையாக ஃபாவிபிராவிர் மாத்திரையை உற்பத்தி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

ஒரு மாதத்தில் 82,500 கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மாத்திரையை உற்பத்தி செய்ய முடியும் என்று கிளென்மார்க் உறுதியளித்துள்ளது.

https://seithichurul.com/business/mukesh-ambani-in-world-top-10-rich-list/23273/

 

seithichurul

Trending

Exit mobile version