வணிகம்

கொரொனா வைரஸ் எதிரொலி; அலுவலகங்களைத் தற்காலிகமாக மூடும் ஐடி நிறுவனங்கள்!

Published

on

சீனாவில் கொரொனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவி வருவதால், தங்களது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் சீனா, ஹாங் காங் மற்றும் தைவானில் உள்ள தங்களது அலுவலர்களைத் தற்காலிகமாக மூடியுள்ளது.

கூகுள் மட்டுமல்லாமல், சீனாவில் இயங்கி வரும் அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் பாதுகாப்புக்கான முடிவுகளை எடுத்துள்ளனர்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களின் சீன பயணங்களை தவிர்க்குமாறு கூறியுள்ளன.

ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது சீன கிளைகளின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்றாலும், பல்வேறு வணிக வலாகங்கள், உணவகங்கள் மூடியுள்ளதால் சீனாவுக்கு கொரொனா வைரஸ் மிகப் பெரிய பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் இதுவரை 9,720 நபர்களும், ஹாங் காங்கில் 15 நபர்களுக்கும், மெகோவில் 7 நபர்களும், தைவானில் 9 நபர்களுக்கும் கொரொனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 213 நபர்கள் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக 15,238 நபர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரைத் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார்.

அந்த மாணவரின் உடலில் கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அந்த மாணவருக்கு கொரொனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தாலும் உடல் நிலை சீராகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த மாணவரை மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த தகவலை இந்தியச் சுகாதார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

Trending

Exit mobile version