இந்தியா

4 மாதங்களுக்குப் பின் இந்தியாவில் இன்றுதான் மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு!

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அளவு இதுவேயாகும். இதன் மூலம் கொரோனாவின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருவதாக தெரிகிறது.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 553 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார்கள். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 97.17 ஆக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி கேரள மாநிலத்தில் தான் மிக அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 8,037 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் 6,740 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

பெரும்பான்மையான மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.

Trending

Exit mobile version