இந்தியா

கொரோனாவின் 3வது அலையைத் தடுக்க முடியாது: ஷாக் கொடுக்கும் மத்திய அரசு!

Published

on

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையே படாதபாடு படுத்தி வரும் நிலையில், அதன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று அதிர்ச்சி அளிக்கும் கருத்தைக் கூறியுள்ளது மத்திய அரசு தரப்பு.

இது குறித்து மத்திய அரசின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் விஜயராகவன் கூறுகையில்:-

கொரோனாவின் மூன்றாவது அலையை நம்மால் தடுக்க முடியாது. வைரஸ் தொற்றின் வீரியத்தைப் பார்க்கும் அப்படித் தான் நடக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் எப்போது 3வது அலை வரும் என்று சொல்ல முடியாது.

புதிய கொரோனா வகையைத் தடுக்க நமது தடுப்பூசிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். தற்போது நாட்டில் அதிவேக கொரோனா தொற்றுக்கு காரணம் ‘டபுள் மியூடென்ட்’ வகையால் தான். இவ்வாறு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

தற்போது தொற்று அதிகமாக இருக்கும் மாநிலங்களில் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீக்கிரமே தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால், தேசிய அளவில் முழு முடக்க உத்தரவு போடப்பட வாய்ப்பிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பு எச்சரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version