இந்தியா

இந்தியாவில் சுனாமி போல் கொரோனா 2வது அலை: கொத்து கொத்தாக சடலங்கள்!

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக சுனாமி போல் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வருகிறது என்றும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதை அடுத்து குவியல் குவியலாக பிணங்கள் எரிக்கப்படும் அவல நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில நாடுகளில் கொத்துக்கொத்தாக பிணங்களை எரித்த அவல நிலை இருப்பதை குறித்த செய்திகளை பார்த்து வந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கே அந்த நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

ஒரு பக்கம் சுனாமி போல் கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் இரண்டாவது அலையால் இந்திய மக்களை நடுநடுங்க வைத்துள்ளது. இன்னொரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொத்துக்கொத்தாக மடியும் நோயாளிகளின் அவலநிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியிலேயே பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு இல்லை என மருத்துவமனைகள் கைவிரித்துவிட்டது. இந்த நிலையில் வட மாநிலங்களில் கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கை அதிகரிப்பதால் குவியல் குவியலாக பிணங்கள் எரிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் சில இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரியூட்ட மயானத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அவசர நடவடிக்கையாக மத்திய அரசு உடனடியாக கொரோனாவால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version