தமிழ்நாடு

தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்துவது தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published

on

கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாய படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று மக்களை கட்டாயபடுத்துவதும் தவறு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று தடுப்பூசி சிறப்பு மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் கிட்டத்தட்ட 24 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பார்வையிட்டார். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளில் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை அறிந்து அந்த ஊராட்சி நிர்வாகிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களின் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலையை 18 லட்சத்தை கடந்த இருபத்தி நான்கு லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி குழந்தை தடுப்பூசி செலுத்துவது அவசியம். ஆனால் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் சிலரிடம் எழுந்துள்ளது. அவர்களிடம் நோயின்றி வாழ தடுப்பூசி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

உலக அளவில் கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமானால் தடுப்பூசி ஒன்றை தவிர வேறு வழியில்லை என்பதை அனைவருக்கும் நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் ஆனால் அதே நேரத்தில் குர்ஆன் வைரஸ் தடுப்பூசியை செலுத்துங்கள். கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும் கட்டாயப்படுத்துதல் தவறு இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version