தமிழ்நாடு

13 நிமிடங்களில் பரிசோதனை முடிவு: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு முடிவு கிடைக்க சில மணி நேரங்கள் ஆகி வரும் நிலையில் 13 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை மையத்தை சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியபோது, ‘சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிவை 13 நிமிடங்களில் அறிவிக்கும் நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

வரும் 5-ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் கொரோனா பரிசோதனை தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

ரயில் மற்றும் சொந்த வாகனத்தில் வருபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று கூறிய அமைச்சர் கேரள தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். வரை கேரளாவில் இருந்து விமானம் ரயில் பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் தமிழகத்திற்கு வருபவர்களுக்கு வெப்பமானி மட்டும் வைத்து பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version