இந்தியா

10 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் லாக்டவுனா?

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதன் காரணமாகவும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது என்பதும் தற்போது தினமும் 7 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே நாடு முழுவதும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதிப்பும் படிப்படியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கேரளா, சிக்கிம், மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாகி வருவதாகவும் இதனை அடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் பிறப்பிக்கப்படுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version