தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீடித்து உள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்குமென்றும் மழை வெள்ளம் போன்ற காலத்தில் கொரோனா மற்றும் டெங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது நலன் கருதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15ஆம் தேதி வரை என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளதோ அவை அனைத்தும் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version