உலகம்

சைவ உணவுகள் சாப்பிடுகிறவர்களுக்கு அவ்வளவாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது!

Published

on

சைவ உணவு சாப்பிடுகிறவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே தான் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் பரவல் தொடங்கியதிலிருந்து கொரோனா குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. வெப்ப மண்டலங்களில் கொரோனா வராது, இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அதையெல்லாம் தகர்த்து பேரிடராக கொரோனா வந்துவிட்டது.

இதனிடையே சைவ உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கு கொரோனா தாக்கம் இருக்காது என்றும் விவாதமானது. இந்த விவாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஆய்வு முடிவுகளும் வந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி அசைவ உணவுகளை உண்பவர்களை விட, சைவ உணவுகளை சாப்பிடுவர்களுக்கு கொரோனா பாதிப்பு சைவ உணவுகள் சாப்பிடுகிறவர்களுக்கு அவ்வளவாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிதளவு இருக்காது என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல், பயணம் செய்யும் போது தனிவாகனம், மிகக்குறைந்த ஊழியர்களைக் கொண்ட தொழில் இடங்களில் பணிபுரிவோர்,  ஏ, ஓ பாசிட்டிவ் இரத்தம் கொண்டவர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version