இந்தியா

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு! 3வது அலை தொடங்கிவிட்டதா?

Published

on

இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது என்பதும் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக குறைந்து 40 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி. இதனால் இந்தியாவில் மூன்றாவது அறை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் 33796 பேர்களும் நேற்று 34703 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நேற்றை விட சுமார் பத்தாயிரம் பேர் அதிகமாக இன்று பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியாவில் இதுவரை 2.97 கோடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்றும், இன்று ஒரே நாளில் 47,240 பேர் குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் 4.59 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 930 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,04,211 என உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version