இந்தியா

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: 3வது அலை தொடங்கிவிட்டதா?

Published

on

இந்தியாவில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது

கடந்த சில நாட்களுக்கு முன் 40 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவின் ஒரு சில இடங்களில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது மீண்டும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இன்று புதிதாக பிறந்த நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 41,806

இதுவரை இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 309,87,880

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை: 39,130

இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை: 301,43,850

இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 581

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 411,989

தற்போது குறைவால் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை: 455,033

author avatar
seithichurul

Trending

Exit mobile version