இந்தியா

‘இப்டி சொன்னா புது கொரோனா காலி..!’- மத்திய அமைச்சரின் ‘குபீர்’ கோஷம்

Published

on

கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியபோது, ‘கோ கொரோனா கோ’ என்று கூறி, கோவிட்-19 நோயை ‘ஓடவிட்டவர்’ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவிவரும் சூழலில், புதிய கோஷத்தை முன்னெடுத்துள்ளார்.

‘நான் முதலில் ‘கோ கொரோ கோ’ என்றேன். அதன் காரணமாக வைரஸ் தொற்று நம்மைவிட்டுப் போய்விட்டது. தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவி வரும் காரணத்தால், ‘நோ கொரோனா நோ’ என்ற கோஷத்தை முன்னெடுக்கிறேன். பழைய மற்றும் புதிய கொரோனா வைரஸ் தொற்று நமக்குத் தேவையில்லை என்பதனால் இப்படியொரு கோஷத்தை முன்னெடுத்துள்ளேன்’ என்று அமைச்சர் அத்வாலே கூறியுள்ளார்.

முன்னதாக அத்வாலேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 10 நாட்கள் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

Trending

Exit mobile version