இந்தியா

கொரோனா தடுப்பூசியால் 447 பேருக்கு பக்கவிளைவுகள்: மத்திய அரசு

Published

on

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் போடப்பட்ட தடுப்பூசியால் 447 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சனியன்று தொடங்கியது.  மாநில சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள் மூலமாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் நாளில் 1,91,181 பேருக்கு போடப்பட்டன.

நேற்று இரண்டாவது நாள் முடிவில் மொத்தம் 2,07,229  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த இரண்டு நாள் போடப்பட்ட தடுப்பூசியில்  447 பேருக்கு தலைவலி, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, காய்ச்சல், குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 447 பேரில் 3 பேர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்பூசியில் உள்ள குறைகளை களையும் பொருட்டாக மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version