இந்தியா

மே 1-லிருந்தது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – இதுதான் விலை!

Published

on

வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மாநில அரசுகள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 

இதையடுத்து நாட்டின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், தங்களின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி என்ன விலைக்கு விற்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது குறித்து சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதைப் பரவலாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் நிறைய பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். மேலும், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியையும் பெருக்கும். 

அரசின் புதிய அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாங்கள் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்தின் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் 50 சதவீதத்தை மாநில அரசுக்கும் கொடுக்க இருக்கிறோம். 

மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கொரோனா மருந்தின் விலையை 400 ரூபாய்க்கு விற்க உள்ளோம். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து 600 ரூபாய்க்கு விற்கப்படும். 

உலகளவில் அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்தின் விலை 1,500 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ரஷ்ய தடுப்பு மருந்தின் விலை 750 ரூபாய்க்கு மேல் உள்ளது. சீன தடுப்பு மருந்தின் விலை 750 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எங்களின் தடுப்பு மருந்தின் விலை குறைவு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். 

seithichurul

Trending

Exit mobile version