இந்தியா

டிசம்பருக்குள் இப்படித்தான் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவுள்ளது அரசு

Published

on

டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள மக்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதாவது, ‘இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93 முதல் 94 கோடியாகும். எனவே அனைவருக்கும் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 186 முதல் 188 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவைக்கபடும். இதில் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் 51.6 கோடி தடுப்பூசி டோஸ்கள் அரசால் பெறப்பட்டு, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

இதன் மூலம் மேலும் 135 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களின் தேவை இருக்கும். இதில் 50 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு ஆகவும், 40 கோடி டோஸ்கள் கோவாக்சின் ஆகவும், 30 கோடி டோஸ்கள் பயோ இ சப் யூனிட் டோஸ்கள் ஆகவும், சைடஸ் காடிலா தடுப்பூசி 5 கோடி ஆகவும், ரஷ்யாவின் ஸ்பட்னிக் வி 10 டோஸ்களும் அடங்கும். இவை அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் பெறப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version