இந்தியா

கொரோனா தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா!

Published

on

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை மிஞ்சியுள்ளது இந்தியா. கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா, பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.

இதுவரை இந்தியாவில் 32.36 கோடி பேருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது போடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் இதுவரை 32.33 கோடி பேருக்குத் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், இதுவரை 5.6 சதவீதம் பேருக்கு மட்டும் தான் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் இந்த விகிதம் 40 சதவீதமாக இருக்கிறது.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்தியா, 3 கோடியே 91 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது ஒன்றிய அரசு.

seithichurul

Trending

Exit mobile version