இந்தியா

ஏப்ரல் 1 முதல் 45 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!!

Published

on

வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ள 60 வயது மேற்பட்டவர்களுக்கும், 45 வயது மேற்பட்ட நோய் பாதிப்பு உடையோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

‘நாட்டில் 45 அல்லது அதற்கு அதிக வயதுடைய அனைத்துக் குடிமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தடுப்பு நிபுணர்களின் அறிவுரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி இருப்பில் நம்மிடம் எந்த வித சுணக்கமும் இல்லை. ஆதலால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும்’ என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரசின் முடிவு குறித்து விளக்கி கோரிக்கை வைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version