இந்தியா

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

Published

on

மார்ச் 1 முதல் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி அதிகமாக மக்கள் எடுத்துக் கொள்ள வைக்கும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் இணை நோய் இல்லாதவர்களும் ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதலில் முன்கள பணியாளர்களுக்கும் அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version