இந்தியா

கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

Published

on

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்துள்ளன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கோவிஷீல்ட் மருந்து அனைத்து வித சோதனைகளையும் முடித்துள்ளதால் அதிக மக்கள், அந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களில் போடப்படும். இது குறித்து முன்னர் விளக்கியிருந்த மத்திய அரசு, முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் அரசு தரப்பு, கோவிஷீல்டு மருந்து சரியான வகையில் வேலை செய்ய வேண்டும் என்றால் இரண்டு டோஸ்களுக்கு மத்தியிலான காலத்தை 6 முதல் எட்டு வார காலமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் 8 வாரங்களுக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்தப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளதாம்.

நாட்டின் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவினருக்கு முதல் டோஸ் கொடுத்து முடிக்கப்பட்டு நிலையில், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு.

 

Trending

Exit mobile version