தமிழ்நாடு

மின்சார ரயிலில் பயணிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம்.. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

Published

on

தெற்கு ரயில்வே சார்பில் புறநகர் மற்றும் பெருநகர மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகள் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்ற முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் வரும் 10-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி அரையில் புறநகர் மற்றும் பெருநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் 2 கொரோனா தடுப்பூசியும் போட்டு இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டு இருந்தாலும் அந்த பயணி ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் போது முகக் கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ரயிலில் பயணிக்கும் போது கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழையும் வைத்து இருக்க வேண்டும். சோதனையின் போது சான்றிதழைக் காண்பிக்க வேண்டும், சான்றிதழ் இல்லை என்றால் முறைகேடாக இருந்தாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மொபைல் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெரும் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version