உலகம்

என்னப்பா ஒரு நாட்டோட அதிபரே இப்படி பேசலாமா.. கொரோனா தடுப்பூசி போட்டால் முதலையாகவும் மாறிவிடுவார்களாம்

Published

on

கொரோனா தடுப்பூசி போட்டால் முதலையாக கூட மாறலாம் என்று பிரேசில் அதிபர் போல்சோனரோ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரேசில் அதிபர் போல்சோனரோ, கொரோனா வைரஸ் என்பது வெறும் சிறிய நோய்தான் என்று கூறிய முகக்கவசம் எதுவும் அணியாமல் பல்வேறு கூட்டங்களுக்கு சென்று வந்தார்.  இதனால் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. 3 முறை பரிசோதனைக்கு பிறகு தான் கொரோனோ நெகடிவ் என வந்துள்ளது.

இதனிடையே பைசர் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நல்ல பலனளிப்பதாக உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பைசர் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உலகின் மற்ற நாடுகளிலும் பைசர் நிறுவனம் தங்களது தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி ஒப்புதல் கேட்டு வருகிறது.

அந்தவகையில், பிரேசில் நாட்டிலும் பைசர் நிறுவனம் தங்களது தடுப்பூசிக்கு அனுமதி கேட்டுள்ளது. ஆனால், பிரேசில் அதிபர் அவ்வளவு எளிதில் அந்த மருந்திற்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில், தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிரேசில் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு முதலையாக மாறினாலும், அது முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம் என்றும் கூறிவிட்டார்.

Trending

Exit mobile version