இந்தியா

இனி வாட்ஸ்அப் வழியே கொரோனா தடுப்பூசி சான்றிதழ்- மத்திய அமைச்சகம் புதுத் திட்டம்!

Published

on

கொரோரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் வழியே பெற முடியும் என மத்திய அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்களது சான்றிதழை இனி வாட்ஸ் அப் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக மத்திய அமைச்சகம் மொபைல் எண் ஒன்றை வெளியிட்டுள்ளது.

+91 9013151515 என்ற மொபைல் எண்ணை உங்களது போனில் சேவ் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக அந்த மொபைல் எண்ணுக்குரிய வாட்ஸ்அப் பக்கத்துக்குச் சென்று ‘covid certificate’ என டைப் செய்து அனுப்புங்கள். அதன் பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் அனுப்பப்படும். அதன் பின்னர் மிகவும் எளிமையாக நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version