தமிழ்நாடு

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் கிடையாது: மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்து ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்கான வழிவகை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த முகாமுக்கு சென்று வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் கிடையாது என சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் இன்று முகாம்கள் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்

தமிழகத்திற்கு சமீபத்தில் 2 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வந்தன என்பதும் ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அவை பிரித்து அனுப்பப்பட்டதாகவும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அளித்த 2 லட்சம் தடுப்பூசிகள் சரியாகி விட்டது என்றும் எனவே சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் அதனால்தான் சென்னையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் விரைவில் மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி அனுப்பியவுடன் சென்னையில் தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version