தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை- தமிழக அரசு ஆணை வெளியிட்டது!

Published

on

கடந்த 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. இப்படி பொறுப்பேற்ற பின்னர், வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகளில், ‘தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை’ என்பது ஓர் அறிவிப்பாகும்.

பலதரபட்ட மக்களும் பயனடையக் கூடிய இந்த அறிவிப்புக்குப் பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இது குறித்து தற்போது அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு,

‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகளுக்கான செலிவினங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு தொகை மீள வழங்கப்படும்.

கோவிட்-19 தொற்று சிகிச்சைக்காக செலவான தொகையினில் மொத்த செலவினம், காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலவிடப்பட்டால் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலவிடப்பட்ட உரிமைக் கோரல் விகிதம் 95 விழுக்காட்டிற்கு மேல் வரும்போது கூடுதல் தொகையினை, காப்பீட்டு நிறுவனத்திற்கு மீள வழங்கிட தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version