தமிழ்நாடு

மீண்டும் தொடங்கும் கொரோனா ஆட்டம்: தடுப்பூசி போட்டும் அதிகரிப்பதால் பரபரப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படிப்படியாக கொரோனா நீங்கி முற்றிலுமாக ஒழிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் தகவல் மிகுந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் படிப்படியாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.

அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதே ரீதியில் சென்றால் மீண்டும் கொரோனா வைரஸ் விசுவரூபம் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டும் பரவுவது எப்படி என்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version