தமிழ்நாடு

தொடங்கியது 3வது அலை: உலக சுகாதார அமைப்பு தகவல்

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா முதல் முதல் அலை தொடங்கி மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தது என்பதும், அதன் பின்னர் இந்த ஆண்டு இரண்டாவது அலை தொடங்கி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் இரண்டாவது அலை தற்போது கட்டுக்குள் வந்த நிலையில் வெகு விரைவில் மூன்றாவது அலை தொடங்கும் என ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது

இந்த நிலையில் சற்று முன் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் அவர்கள் கூறியபோது உலகில் மூன்றாவது அலை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில் இன்னும் இரண்டாவது அலை முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் மேலும் கூறியபோது கொரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்றும் உலகின் பல 111 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும், இதுவரை கண்டறியப்படாத நாடுகளிலும்கூட டெல்டா மிக வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

உலக நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3-ஆவது அலையில் இருந்து அனைவரும் தப்பிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதுதான் என்றும் உலகில் உள்ள அனைவருமே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

Trending

Exit mobile version