தமிழ்நாடு

இளவரசிக்கும் கொரோனாவா? சிறைத்துறை விளக்கம்

Published

on

சசிகலாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யபட்டனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இவர்கள் பெங்களூருவில் உள்ள பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சிறை தண்டனை முடிந்து விடுதலையாகவுள்ள நிலையில் நேற்று முன்தினம் சசிகாலவிற்கு திடீரென மூச்சுத் திணறல், காய்ச்சல் ஏற்பட்டது.

இதனையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் சசிகலா சேர்க்கப்பட்டார். அங்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.மேலும் அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதால் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது இளவரசிக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடியவிரைவில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version