இந்தியா

6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – விரைந்த ஒன்றிய அரசின் நிபுணர் குழு

Published

on

இந்திய அளவில் 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது கடந்த சில நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நிபுணர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாநிலங்களுக்கு விரைந்துள்ள நிபுணர் குழுக்கள், எந்தெந்த காரணங்களினால் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவுகிறது என்பதை கண்டறிந்து அதைச் சமாளிக்க சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் எனத் தெரிகிறது.

இன்று காலையோடு இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 39 நாட்களில் மடும் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version