தமிழ்நாடு

4 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவுகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published

on

நான்கு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கொரனோ கிளஸ்டர் உருவாகிறது என்றும் பிஏ 4 தொற்று உறுதியான நிலையிலும் சென்னையில் உள்ள மக்கள் கவனக்குறைவாக இருக்கின்றனர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version