தமிழ்நாடு

பள்ளிகளை குறிவைக்கும் கொரோனா வைரஸ்: ஆசிரியர்களும் தப்பவில்லை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நேற்று கிட்டத்தட்ட 1000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளை கொரோனா வைரஸ் குறி வைத்து தாக்கி வருவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் தமிழக அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை உள்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் மாணவ மாணவிகளை மட்டுமின்றி ஆசிரியர்களையும் தாக்கி வருவது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்று முடிவான பின்னர் பள்ளிகளை நடத்துவது ஏன் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பள்ளிகளை மூடி மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending

Exit mobile version