உலகம்

சீனாவில் மீண்டும் ஊரடங்கு: கொரோனா வேகமாக பரவுவதால் பரபரப்பு!

Published

on

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது என்பதும் பல நாடுகளின் பொருளாதாரம் சீரழிந்து கொரோனாவால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் லான்சூவ் என்ற நகரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதனை அடுத்து சீனா அரசு லான்சூவ் பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் லான்சூவ் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version