தமிழ்நாடு

தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை: சுகாதாரத்துறை தகவல்!

Published

on

தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டதாகவும் எனவே அனைவரும் கொரனோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற அச்சம் பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவது, கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி விட்டதாகவும் பொதுமக்கள் அனைவரும் கொரனோ தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version