தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு: முதல் கட்டுப்பாடு என்ன தெரியுமா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலகி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால் தமிழக அரசின் சுகாதாரத் துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாகவும், மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதன் காரணமாகவும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது 50 க்கும் குறைவாகவே தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் கட்டமாக தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடு விலக்கி கொள்ளவில்லை என்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாஸ்க் அணிவது அவசியம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் மாஸ்க் அணிவது அவசியம் என்ற கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version