தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா?

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழகம், கேரளா, அசாம், புதுவை மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்து மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரும் தேர்தல் ஆணையம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதாப் சாகு அவர்கள் தெரிவித்த போது சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கான உரிய பாதுகாப்பு வழிமுறைகளை தேர்தல் அதிகாரிகள் அனைவரும் பின்பற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பது ரிஸ்க்கான ஒன்று என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version