தமிழ்நாடு

கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு

Published

on

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கொரோனா கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து இருந்த தமிழக அரசு தமிழகத்தில் இரண்டாவது அலை கையை மீறிச் சென்று விட்டதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக மோசமாக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லை தாண்டி போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version