தமிழ்நாடு

பிரேமலதாவின் கொரோனா பரிசோதனை ரிசல்ட்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!

Published

on

பிரேமலதாவின் சகோதரர் எல்கே சதீஷ் அவர்களுக்கு சமீபத்தில் கொரனோ தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் பிரேமலதாவும் கொரனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர்

இதனை அடுத்து விருத்தாச்சலம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பிரேமலதா கொரனோ பரிசோதனை செய்து கொண்டார். அவரது கொரனோ பரிசோதனை ரிசல்ட் தற்போது வந்திருக்கிறது.

பிரேமலதா உள்பட 12 பேருக்கு கொரனோ பரிசோதனை செய்ததாகவும் அதில் பிரேமலதாவுக்கு கொரனோ நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பிரேமலதாவுக்கு கொரனோ தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவர் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக எல்.கே.சுதீஷ்க்கு கொரனோ பாதித்த நிலையில் அவரது மனைவிக்கும் கொரனோ பாதிப்பு இருந்ததாகவும், இதனையடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது பிரேமலதா, விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் ஆகிய மூவரும் தேமுதிக வேட்பாளர்களுக்காக சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version