இந்தியா

திருப்பதி மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் பக்தர்கள்: என்ன காரணம்?

Published

on

திருப்பதி மலை அடிவாரத்திலேயே பல பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது தான் இலவச தரிசனத்திற்கும், கட்டண தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களை மலை அடிவாரத்திலேயே நிறுத்தி ஒரு சிலரை திருப்பி அனுப்பி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இவை இரண்டில் ஏதாவது ஒன்று இல்லாத பக்தர்கள் மலையேற அனுமதிக்க மாட்டார்கள் என்றும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் மலை அடிவாரத்திலேயே திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தடுப்பூசி மற்றும் சான்றிதழை சோதனை செய்து வருகின்றனர். இவை இரண்டில் ஏதாவது ஒன்று இல்லாத பக்தர்களை அவர்கள் வெளியே அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் இந்த விவரம் தெரியாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் இல்லாமல், தடுப்பூசி சான்றிதழும் இல்லாமல் வந்த பக்தர்கள் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்படும் அதை தருவதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தாலும் ஒரு நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்ட சான்றித இல்லாத காரணத்தினால் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் திருப்பதி மலைக்கு செல்வதற்கு கட்டண தரிசன டிக்கெட்டுகள் அல்லது இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவை ஏதாவது ஒன்றை பக்தர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version