இந்தியா

இன்று மட்டும் சுமார் 40,000 பேருக்கு கொரோனா தொற்று; இந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பு!

Published

on

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,370 ஆக அதிகரிதுள்ளது.

தேசிய அளவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் மிக அதிக கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மற்றும் 25 ஆயிரத்துக்கும் அதிகாமனவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களைத் தவிர அசாம், தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் 3.93 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்ப்பட்டுள்ளது. இன்னும் 23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு. 

தற்போது மீண்டும் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து சில நாட்களுக்கு முன்னர் மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘நாடு முழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கொரோனா பெருமளவு கட்டுக்குள் வந்தது. தற்போது பல நாடுகளில் உள்ளது போலவே அடுத்த அலைகள் உருவாகும் சூழல் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இந்த சமயத்திலேயே நாம் கொரோனாவை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது மீ்ண்டும் நாடு தழுவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’ என்றார். 

Trending

Exit mobile version