தமிழ்நாடு

கொரோனா -வதந்திகளும்  உண்மையும் 

Published

on

கொரோனா  வதந்திகளும்  உண்மையும் 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.அதேசமயத்தில் சமூகவலைத்தளங்களில்  வீண் வதந்திகளும்  கொரோனாவைப்போல  வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா  பற்றி எதை  நம்புவது எதை  நம்பவேண்டியதில்லை என்று அரசும்,மருத்துவர்களும்  சில விளக்கங்களைப் பகிர்ந்து உள்ளனர்.
வதந்தி :வெந்நீர்,அதிகமான  நீர் அருந்துவதால் கொரோனா வராது.
உண்மை :அதிக நீர் அருந்துவது அவசியம் ,ஆனால்  அது கொரோனவை தடுக்காது.
வதந்தி :உப்பு கலந்த நீரில் வை கொப்பளித்தால் நோய்  வராது .
உண்மை :இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
வதந்தி :சிக்கன் ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா  வரும்.
உண்மை :எந்த உணவுப் பொருட்களின் மூலமும் கொரோனா  பரவுவதாக உறுதிசெய்யப்படவில்லை.மாறாக முட்டையிலும்,சிக்கனிலும்  அதிக புரதச் சத்து இருக்கிறது .அது எடுத்துக்கொண்டால் நோய்  எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் .
வதந்தி :வெயில் அதிகமான இடங்களில்,வெயிலில் நின்றாலோ கொரோனா பரவாது.
உண்மை :வெயில்  அதிகமான நாடுகளிலும் கொரோனா  தாக்கம் உள்ளது.வெயில் இருந்தாலும் கொரோனா  தாக்க வாய்ப்பு இருக்கிறது .
வதந்தி :வெள்ளி பாத்திரங்களில் உணவு உண்பதால் கொரோனவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் .
உண்மை :இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
வதந்தி :முகக்கவசங்கள் கொரோனவை தடுக்காது.
உண்மை :முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனா  தொற்று  உள்ளவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.ஆனால்  முக கவசத்தை முறையாகக் கையாள வேண்டும்.
பயன்படுத்திய முகக்கவசம்,கையுறை ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்தவேண்டும் .
கொரோனவை விட வேகமாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் .உண்மையை புரிந்துகொண்டு அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
1மணி நேரத்திற்கு ஒரு முறை சோப்பு போட்டு கை  கழுவுங்கள் .கண்,மூக்கு,வாய்  அடிக்கடி தொடுவதை தவிருங்கள்.வெளியில் செல்வதை தவிருங்கள். ஒருவேளை வெளியில் சென்று வந்தால் குளித்துவிட்டு வீட்டுக்குள் செல்லுங்கள்.இருமல்,தும்மல் ,காய்ச்சல்  போன்ற அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.சுயமருத்துவம் கூடாது.
அனைவரும் சேர்ந்து ,தனித்து வாழ்ந்து  கொரோனாவை துரத்துவோம்.அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நாமும் பொறுப்புள்ள குடிமகனாக இருப்போம் .

 

Trending

Exit mobile version