தமிழ்நாடு

திடீரென தோன்றிய கொரோனா மாரியம்மன் கோவில்: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

Published

on

திண்டுக்கல் அருகே திடீரென தோன்றிய கொரோனா மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் பகுதியில் மாசாணி அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெள்ளி செவ்வாய் மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் அந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த மாரியம்மனை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து இந்த கோவிலில் திடீரென கொரோனா மாரியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. மாரியம்மனே பக்தர் ஒருவரின் கனவில் வந்து கொரோனா மாரியம்மன் சிலையை வைக்க உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கொரோனா மாரியம்மன் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் ஏராளம் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்து பூசாரியிடம் பிரசாதம் பெற்றால் கொரோனா தொற்று பாதிக்காது என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று வராது என்று அந்த பூசாரி அங்கு வரும் பக்தர்களுக்கு உறுதி அளித்து கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் வழிபாடு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மற்ற நாட்களில் இந்த கோவில் மட்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருவதாகவும், ம் ஏராளமானோர் பூஜையில் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த ஒரு கொடூர நோய் பரவினாலும் அந்த நோயை தீர்க்க மாரியம்மன் உதவி செய்வார் என அந்த பகுதி மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கொரோனா நோயிலிருந்தும் பொதுமக்களை மாரியம்மன் காப்பார் என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version