தமிழ்நாடு

கொரோனா விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து!

Published

on

கொரோனா ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த காலத்தில் ஊரடங்கை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி கூடங்குளம் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும், சிஏஏ போராட்டம் தொடர்பான சுமார் 1500 வழக்குகளும் கைவிடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து இந்த வழக்கில் சிக்கியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version