தமிழ்நாடு

ரூ.5 லட்சம் கொரோனா கடன்: குறைந்த வட்டியில் தரும் வங்கிகள்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகள் முன்வந்துள்ளது பெரும் உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே எஸ்பிஐ வங்கி கொரோனா சிகிச்சைக்காக பிணையில்லாமல் அதிகபட்சமாக 5 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்க முன் வந்துள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் கொரோனா சிகிச்சைக்காக மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாழ்வாதரத்தை மேம்படுத்த ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

தனிநபர்களுக்கு மட்டுமின்றி தொழில்கள் சார்ந்து இருப்பவர்களுக்கும் இது போன்ற கொரோனா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலையில்லாமல் இருக்கும் குடும்பத்தினர் செலவினங்களுக்கும், கொரோனா சிகிச்சை செலவுக்காகவும் இந்த கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் என்றும் இந்த கடனுக்கு குறைந்த சதவீத வட்டி பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version