இந்தியா

கேரளாவில் புது உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு!

Published

on

இந்திய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருப்பவை கேரளாவும் மகாராஷ்டிராவும். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சீராக இருந்து வரும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் 22,056 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது. மேலும் 131 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்து உள்ளார்கள்.

குறிப்பாக கேரளாவின் மல்லப்புரம், திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, கொல்லம், ஆலப்புழா, கன்னூர், திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மிக அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 1,000க்கும் மேல் தினமும் பதிவாகி வருகிறது.

தற்போது கேரளத்தில் 4,46,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிக்கப்படும் நிலையிலோ இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version