உலகம்

கொரோனாவை கண்டுபிடிக்க புதிய செயலி: 3 நிமிடத்தில் அறியலாம்!

Published

on

கொரோனா தொற்று ஒருவருக்கு பரவி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தற்போது பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரும் நிலையில் கண்களை ஸ்கேன் செய்து செயலி ஒன்றின் மூலம் மூன்றே நிமிடத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளதா? என கண்டுபிடிக்கலாம் என ஜெர்மனி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்த முறையின்படி கண்களை ஸ்கேன் செய்து அந்தப் புகைப்படத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ள Semic EyeScan என்ற செயலிக்கு அனுப்பினால் கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அழற்சியின் அறிகுறி மூலம் கொரோனாவை உறுதி செய்யலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்விழி படலத்தில் ஏற்படும் லட்சக்கணக்கான இளஞ்சிவப்பு அழற்சியில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட அழற்சியை எளிதாக கண்டறியலாம் என்றும் இந்த செயலி மூலம் 95 சதவீதம் சரியாக இருப்பதாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த செயலியை பயன்படுத்தினால் மூன்று நிமிடத்தில் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்த செயலியை கண்டுபிடித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version