தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா… தயார் நிலையில் தமிழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Published

on

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி இன்று மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

#image_title

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஒத்திகையை ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

33,264 ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள், 22,820 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள். 7,797 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. தற்போது கொரோனா பரிசோதனை நாளொன்றுக்கு 4000 பேருக்கு செய்யப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகமானால் பொது இடங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்குவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version