தமிழ்நாடு

உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் ஊரடங்கா..?- முதல்வர் முக்கிய தகவல்

Published

on

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக அரசு அமல் செய்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளுடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், நாகை, மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தான் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாக 2 கோடியே 5 லட்சம் பேருக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நாம் நன்றாக செயல்பட்டதன் காரணமாக, நம்மைப் போல பிற மாநிலங்களும் தமிழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 விழுக்காடு மக்களான 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 ஆம் தேதி வரையில் சுமார் 37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மக்களும் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் நம்மிடம் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version