உலகம்

முதன்முறையாக லட்சத்தீவுகளுக்குள் கால் பதித்துள்ளது கொரோனா வைரஸ்..!

Published

on

லட்சத்தீவில் இதுவரையில் நுழையாது இருந்த கொரோனா வைரஸ் முதன்முறையாகத் தற்போது லட்சத்தீவுக்குள் கால் பதித்துவிட்டது.

அரபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கிறது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள். கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்த போதும் கூட இங்கு யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இச்செய்தி மிகவும் ஆச்சர்யமாக இருந்தாலும் இப்பகுதி நிர்வாகமும் மக்களும் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றியதால் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து தப்ப முடிந்ததாகத் தெரிவித்து வந்தனர்.

முதன்முறையாக 2020 ஜனவரி மாதம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த முதல் செய்தி வெளியான போதே லட்சத்தீவுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளைப் போல் முகக்கவசம், கிருமிநாசினி, தடைகள் என எதுவுமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், தற்போது முதன்முறையாக லட்சத்தீவுகளுக்குள் கொரோனா நுழைந்துள்ளது. ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து சென்ற துணை ராணுவ படை வீரர் ஒருவருக்குக் கொரோனா தொற்று முதலில் பாதித்துள்ளது. அவர் மூலம் கூடுதலாக 14 பேருக்கு பரவியுள்ளது. கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்து போதும் ராணுவ வீரர் ஒருவர் மூலம் லட்சத்தீவுகள் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

Trending

Exit mobile version