தமிழ்நாடு

20 நாட்களில் இருமடங்காகியது சென்னை கொரோனா!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் மார்ச் 1ஆம் தேதி இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 1ஆம் தேதி 171 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் குறைவாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 200க்கும் அதிகமாக 350ஐ தாண்டிவிட்டது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு தகவலாகும்.

இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்த சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 671 என்றும் அவர்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 20 பேர் குணமாகி உள்ளனர் என்பதும் 4 ஆயிரத்து 196 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தேர்தல் முடிந்த பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

மார்ச் 19: 421
மார்ச் 17: 395
மார்ச் 16: 352
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 01: 171

seithichurul

Trending

Exit mobile version